கட்டுநாயக்கவில் தரையிறங்கிய சிறப்பு விமானம்


மினுவாங்கொடை நிருபர்-
சிறப்பு நோக்கத்துடனான விமானமொன்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய "ZS-ASN" ரகத்திலான
"The Basler BT-67" என்ற விமானமே தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் ஒரே நேரத்தில் 1000 மீற்றர் உயரத்திலிருந்து நிலத்தைத் துல்லியமாகவும் மேலோட்டமாகவும் படம் பிடிக்கக்கூடியது.
மூன்று நாட்கள் திட்டத்துக்காக, குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக, சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள குறித்த விமானம், ஒன்பதாம் திகதி இந்தியா நோக்கிப் பறக்கவுள்ளது. இந்தியாவுக்குச் செல்லவுள்ள குறித்த விமானத்தின் பயணப்பாதை, இலங்கை வழியாகத் திட்டமிடப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
இலங்கையில் தரையிறங்கும் நோக்கிலேயே பயணப்பாதை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்திடம் இது தொடர்பில் வினவியபோது, விமானத்தின் வருகை தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என்றும் ஆனால், நாட்டில் எவ்விதக் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -