இம்முறை புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற மக்கா செல்லவுள்ளோர்களுக்காக ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நடாத்தவுள்ளது.
மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இம்மாதம் (9) ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணிக்கு இக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
புனித ஹஜ் கடமையினை எவ்வாறு மேற்கொள்வது என்பனபற்றி வீடியோ காட்சிகளுடன் குறித்த கருத்தரங்கு இடம்பெறவுள்ளதால் இதில் ஆண்கள் பெண்கள் என இரு பாலாரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புகளுக்கு
077 93 57 420