கிழக்கில் 341 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கு நிரந்தரநியமனம்.

காரைதீவு சகா-

கிழக்கு மாகாணத்தில் நாளை (29) திங்கட்கிழமை 341 விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்களுக்கு நிரந்தரநியமனம் வழங்கப்படவிருக்கிறது.
சகல விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்களும் அந்தந்த வலயக்கல்விப்பணிமனைக்குச்சென்று நியமனக்கடிதத்தைப் பெற்றுக்கொண்டு உடனடியாக தங்களுக்கான பாடசாலைக்குச் சென்று கடமையேற்குமாறு கிழக்குமாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவசரஅறிவித்தலை விடுத்துள்ளார்.
இவர்களது பெயர் நியமிக்கப்பட்ட பாடசாலை மற்றும் வலயம் தொடர்பான பூரண விபரம் கிழக்குமாகாணக்கல்வித்திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விலாசம் www.eastpde.edu.lk என்பதாகும்.

இணையத்தளத்தில் பெயர் வராத விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்கள் தேசியபாடசாலைக்கு நியமிக்கப்பட்டிருப்பதனால் அவர்கள் உயர்கல்விஅமைச்சின் தேசியபாடசாலைக்கிளையுடன் தொடர்புகொண்டு தங்கள் நியமனக்கடிதங்களைப்பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் பணிப்பாளர் மன்சூர் மேலும் தெரிவித்தார்.

நேற்று கொழும்பு இசுருபாய மத்தியகல்வியமைச்சிலிருந்து இவர்களுக்கான நியமனக்கடிதங்களை திங்களன்று வழங்குமாறு மாகாணக்கல்விப்பணிப்பாளருக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பேரில் மாகாணக்கல்வித்திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் இரவோடிரவாக நியமனக்கடிதங்களை தயாரித்து இன்று(28) ஞாயிற்றுக்கிழமை அந்தந்த வலயக்கல்விப்பணிப்பாளர்களிடம் நேரடியாக சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்கள் வலயக்கல்விப்பணிமனைசென்று நியமனக்கடிதத்தைப்பெற்று நியமிக்கப்பட்ட பாடசாலையில் கடமையை பொறுப்பேற்கவேண்டும்.

தற்காலிக நியமனக்கடிதங்களுடன் பாடசாலைகளில் இணைக்கப்பட்ட இவர்களது 42நாள் உள்ளக பயிற்சிக்காலம் கடந்த வெள்ளியுடன்(26) நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரைகாலமும் பயிற்சிபெற்ற பாடசாலைக்கு பெரும்பாலானோருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் சிலர் புதிய பாடசாலைகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 480விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்கள் கிழக்கில் பயிற்சிபெற்றவந்தபோதிலும் 341பேருக்கே இன்று நிரந்தரக் நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. மீதி 139பேர் தேசியப்பாடசாலையில் நியமிக்கப்பட்டுள்ளதனால் அவர்களுக்கான நியமனக்கடிதங்களை மாகாணக்கல்வித்திணைக்களம் வழங்கமாட்டாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -