இனங்களுக்கிடையில் நல்லுறவையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தும் வகையில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ்விளையாட்டுக்கழகத்தின் 40 வருட புர்த்தியை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் மிகப் பிரமாண்டமான ” லீ மெரிடியன் பிரேவியன் சமர் – 2019 20 க்கு 20 ( T 20 )கடினபந்து கிறிக்கட் சுற்றுப் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 2 ) ஆரம்பம்
அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருதின் முதுசங்களான பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40 வருட புர்த்தியை முன்னிட்டு கிழக்கு மாகாணரீதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 9 பிரதேசங்களைச் சேர்ந்த 32 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்கும் 20 இற்கு 20 மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டி சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை ( 2 ) மாலை ஆரம்பமாகவுள்ளது.
மோட்டார் வாகன திணைக்கள பிரதம பரிசோதகரும் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழக தவிசாளருமான பொறியியலாளர் ஏ.எல்.எம்.பாறூக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு முதல் போட்டியினை புர்வமாக சம்பிரதாய ஆரம்பித்து வைக்கவுள்ளார்
சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் சிரேஸ்ட ஆசிரியருமான எம்.ஐ.எம்.அஸ்ஹர் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி சுற்றுப் போட்டி தொடரின் முதல் நாள் போட்டியில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகமும் கல்முனை யஹ் பேர்ட்ஸ் விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளன.
ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரை முதலாம் கட்ட போட்டிகள் இடம்பெறவுள்ளன.
3.08.2019 காலை சம்மாந்துறை ஈஸ்டன் ரோயல் அணியும் சம்மாந்துறை றியல் மெற்றிக் அணியும் அன்று மாலை கல்முனை றினோன் அணியும் சாய்ந்தமருது பீமா அணியும் 4.8.2019 ஞாயிற்றுக்கிழமை காலை மூதூர் யங் லயன்ஸ் அணியும் முஸ்தகீன் அணியும் அன்று மாலை மூதூர் யங் லயன்ஸ் அணியும் கல்முனை டொப்பாஸஸ் அணியும் 5.8.019 திங்கட் கிழமை மாலை கல்முனை அஸ் ஸம்ஸ் அணியும மருதமுனை பிறைட்பியுச்சர் அணியும் , 6.8.2019 செவ்வாய்க்கிழமை மாலை சாய்ந்தமருது இலவன் ஹீரொஸ் அணியும் சாய்ந்தமருது நியு ஸ்டார் அணியும் , 7.8.2019 புதன் கிழமை மாலை கல்முனை ஹரிகன்ஸ் அணியும் கல்முனை கோல்ட் ஸ்டார் அணியும் , 8.8.2019 வியாளக்கிழமை மாலை சாய்ந்தமருது ஒஸ்மானியா அணியும் நிந்தவுர் லகான் அணியும் , 9.8.2019 சாய்ந்தமருது ஸஹிரியன்ஸ் அணியும் காரைதீவு ஜொலி கிங்ஸ் அணியும் , 10.8.2019 சனிக்கிழமை காலை சம்மாந்துறை கிறிக்கட் அணியும் சம்மாந்துறை ஈஸ்டன் ரோயல் அணியும் அன்றைய தினம் மாலை கல்முனை ஜிம்கானா அணியும் காரைதீவு விவேகானந்தா அணியும் மோதவுள்ளன.


