2016 பட்டாதாரிகளும் பயனடையலாம் அவசரமான வழிமுறையை கையாளுங்கள் -இப்படி கூறுகின்றார் இஸ்மாயில் எம்.பி.


எஸ்.அஷ்ரப்கான்-
ரசாங்கத்தினால் வழங்கப்பட்டவுள்ள பட்டாதாரிகள் தொழில் நியமனத்தில் இதுவரை பெயர் வெளிவாராத பலர் மனக் கவலைகொண்டுள்ளதாக அறிந்தேன். அவ்வாறான நிலையிலுள்ளோர் மேன்முறையீடு செய்வதினூடாக தங்களையும் தொழில் வாய்ப்பில் இணைத்துக் கொள்ள முடியும். என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற இது விடயமான சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த விடயமாக மிகவும் அதிருப்தியுடன் இருப்பதாக சிலரின் மனக் கவலைகளை வெளியிட்டபோது, இதற்கான தீர்வுக்காக பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்.

“தற்போது வெளியான பெயர்ப் பட்டியலில் தனது பெயர் வெளிவாராமல் இருக்கும் 2016 இற்கு முதல் வெளியாகிய உள்வாரிப்; பட்டாதாரிகள் உடனடியாக தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளரும் பிரதமரின் செயலாளர்களில் ஒருவராகவும் செயற்படுகின்ற சிவஞானஜோதி அவர்களுக்கு முகவரியிடப்பட்ட மேன்முறையீட்டு கடிதமொன்றை உடனடியாக அனுப்பி வைக்குமாறும், குறித்த கடிதத்தின் பிரதியொன்றினை (அம்பாறை) மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அனுப்பிவையுங்கள், அதே சந்தர்ப்பத்தில் கடிதம் அனுப்பிய கையோடு தன்னிடம் அறிவியுங்கள் மேலதிக செயற்பாடுகளை மேற்கொள்கின்றேன்” - என்றார்.

குறித்த விடயமானது இன்று பலரும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் விடயமொன்றுக்கான உடனடித் தீர்வாக இருக்குமென நம்புகின்றோம். அந்த அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினரினால் கூறப்பட்ட மேன்முறையீட்டுக்கான முகவரி. பின்வருமாறு,


Mr.V.Sivagnanasothy
Secretary –
Ministry of National Policies, Economic Affairs, Resettlement & Rehabilitation, Northern Province Development and Youth Affairs
1st Floor, "Miloda"
Bristol Street, Colombo 01.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -