கொத்மலையில் தோட்ட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் மீது தோட்ட தொழிலாளர்கள் தாக்குதல். காயமமைந்த இருவரும் வைத்தியசாலையில் – சொத்துகளுக்கும் சேதம் – 18 பேர் கைது

க.கிஷாந்தன்-
கொத்மலை புளும் பீல்ட் தனியார் தோட்டத்தில் தோட்ட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஆகிய இருவர் மீது அந்த தோட்ட தொழிலாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் 05.07.2019 அன்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது சொத்துகள் சிலவற்றிற்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.

மேலும், மேற்படி காயமடைந்த இருவரும் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அப்பகுதியை சேர்ந்த 18 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புளும் பீல்ட் தோட்டத்தில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊழியர் நம்பிக்கை நிதி, ஊழியர் சேமலாப நிதி ஆகியவற்றை அவர்களின் கணக்கில் வைப்பிலிடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 05.07.2019 அன்று மதியம் தொழிலாளர்கள் குறித்த தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே தொழிலாளர்கள் சிலர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தோட்ட முகாமையாளரின் விடுதிகள் இரண்டுக்கும், வாகனங்கள் இரண்டுக்கும், கட்டிடங்கள் சிலவற்றிருக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கிருந்த 15 இலட்சம் ரூபா பணமும் களவாடப்பட்டதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகத்தின் பேரில் 18 பேர் கைது கொத்மலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றததில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும், குறித்த தோட்ட மக்களையும், அங்குள்ள சொத்துக்களையும் பாதுகாக்க பொலிஸ் பாதுகாப்பும், இராணுவ பாதுகாப்பும், விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -