ஊடகவியலாளர்கள்; கூட்டுறவுடன் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் என நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார்.
சிலோன் மீடியா போரம் ஏற்பாட்டில் 'மண்வாசனை' நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் சனிக்கிழமை (08) மத்தியமுகாம் மஃறூப் தோட்டத்தில் இடம்பெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ்..எம். முஜாஹித், செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஜபீர்ஆகியோரின் நெறிப்படுத்தவில் போரத்தின் தலைவர் றியாத்ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேசத்தின் பிராந்திய ஊடகவியலாளர்களாக நீண்ட காலமாக பணியாற்றி வரும்சிலோன் மீடியா போரத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான றியாத் ஏ.மஜீத், சிலோன் மீடியா போரத்தின்பொதுச் செயலாளரும் ஊடகவியலாளருமான ஏ.எஸ்.எம்.முஜாஹித், சிலோன் மீடியா போரத்தின் செயற்குழுஉறுப்பினரும் ஊடகவியலாளருமான எம்.எம்.ஜபீர் ஆகியோர் நாவிதன்வெளி பிரதேச சபை கௌரவ உறுப்பினர்எம்.வி.நவாஸினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரை நிகழ்த்துகையில்,
ஊடகத்தினை சரியான முறையில் பயன்படுத்தும் போது அது நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஓர்முன்னுதாரணமாக பயனள்ளதாக இருக்கும். அது பிழையான வழி முறையில் பயன்படுத்தப்படுமாயின்; அதுநாட்டையும் சமூகத்தையும் துர்பாக்கிய நிலைக்கும் கொண்டு சென்று விடும்.
ஊடகவியலாளர்கள் சிறந்த முறையிலும், கூட்டுறவான நிலையில் செயற்பட வேண்டும். இதன்மூலம் எமதுநாட்டிற்கும் சமூக வளர்ச்சிக்கும் சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும்
கனிஸ்ட ஊடகவியலாளர்களுக்கு சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் ஆலோசகளையும் வழிகாட்டல்களை வழங்கவேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்க முடியும் என்றார்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை கௌரவ உறுப்பினர் எம்.வி.நவாஸ், நாவிதன்வெளி உதவி பிரதேசசெயலாளர் என்.நவநீதராஜா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்புச்செயலாளர் நௌபர் ஏ.பாவா, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிப் பிரிவு உதவிப்பணிப்பாளர் சீ.வி.எம்.சியாம், தினரன் விளையாட்டு ஆசிரியர் பரீத் ஏ.றகுமான், தென்கிழக்கு பல்கலைக்கழகபொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் ஏ.எம். அஸ்லம் சஜா, கனி இன்ஜினியரிங்முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிசாத் உள்ளிட்ட போரத்தின் உறுப்பினர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.