பதவி பட்டங்களுடன் இருந்து கொண்டு மக்களுக்கு நலவு செய்யவில்லை என்றால் அப்பதவிள் தேவையில்லை-ஹிஸ்புல்லா


எம்.பஹ்த் ஜுனைட்-

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையின் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் இந்த சந்தர்ப்பத்தை பயண்படுத்தி சில இனவாதிகள் முஸ்லிம்கள் மீது இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டு உயிர்,உடமைகளுக்கு ஆபத்தை விளைவித்தனர்.

அதுபோல ஒரு சிலரின் தீவிரவாத மிலேட்சத்தனமான செயற்பாடுகளை வைத்து முழு முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் . இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தோடும் பதவிகளோடும் இருக்கும் போது முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க முடியாது போகுமானால் அந்த பதவியில் இருந்து எந்த பயனும் இல்லை என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெறிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் முஸ்லிம்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் மக்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையின் பின்னர் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயலில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெறிவித்தார்..

மேலும் உரையாற்றிய அவர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள இவ்வாறான பிரச்சினைகளைகளினால் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 7 ஆயிரம் குடும்பத்தினர் இலங்கையில் உள்ள ஒரு துதரகத்தில் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

"முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாட்டிலேதான் சிறுபான்மையினர். ஆனால் உலகில் நாங்கள் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். இலகுவாக எங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று, யாரும் நினைத்து விடக் கூடாது" என குறிப்பிட்ட அவர் தற்போது இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமை ஒற்றுமைப்பட்டுள்ளது தனது சமூகத்திற்காக பதவிகளை தூக்கி எறிந்து விட்டு போராட தயாராகியுள்ளோம். பதவிகளில் இருந்தால் சில கட்டுப்பாடுகளுடனே பணியாற்ற வேண்டும் ஆனால் தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லை தைரியமாக குரல் எழுப்புவோம் என தெறிவித்தார்.

ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 125 பேர் வரையில்தான் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. மீதி அனைவரும் அப்பாவிகள். தொழுகைக்குப் பிறகு ஓதும் பிரார்த்தனைகளை எழுதி வைத்திருந்தவர்கள் கூட ஊவா மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதே போன்று குரான் மற்றும் ஹதீஸ் பிரதிகளை வைத்திருந்தவர்கள் என பலரும் பல இடங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்".

ஆனால் முஸ்லிம்களின் உயிருக்கு உடமைக்கும் தீ மூட்டியவர்கள் வர்த்தக நிலையங்களை அடித்து நொருக்கிய கடையர்கள் இன்று சுதந்திரமாக வெளியில் திரிகின்றனர்.

அநாவசியமாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் சிறைவாசம் அனுபவித்துவருகின்றனர் அவர்களை விடுவிக்கும் முயற்சிகளை சட்ட ரீதியாக நாம் முன்னெடுக்கவுள்ளோம் எனவும் தெறிவித்தார்.

இடம்பெற்ற இம் மக்கள் சந்திப்பில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், நகர சபை உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டிருதனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -