யாழ் குடாவில் அதிக வறுமையினையினை கோப்பாய் பிரதேசமே கொண்டுள்ளது

- சமுர்த்தி நிகழ்வில் தவிசாளர் நிரோஷ்-
றுமையினை வெல்வதற்கான உத்தியாக சமுர்த்தியைக் கையாளவேண்டிய வேண்டிய பொறுப்பு கல்வியாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், பிரஜைகள் என சகல தரப்பிடமும் காணப்படுவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
கோப்பாய் பிரதேச செயலகத்தின் கீழ் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 1840 பயனாளிகளுக்கு சமூர்த்தி வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கோப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் தலைமையில் கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டின் வறுமை ஒழிப்புக்காக அரசின் கொள்கையாக உருவாக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகவே சமுர்த்தித் திட்டம் அமைகின்றது. இச் சமூர்த்தித் திட்டம் என்பது நிவாரணம் அல்ல. மாறாக குடும்பங்களை வறுமையில் இருந்து மீள்விப்பதற்கான உத்திகள் அடங்கிய செயற்றிட்டமாகும். போரின் பின்னர் பல்வேறு நெருக்கடிகளை கொண்டவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏனைய பிரதேசங்களைக் காட்டிலும் கோப்பாய் பிரதேசமே யாழ் குடாநாட்டில் வறுமை நிலையில் அதிகமான பிரதேசமாக உள்ளது.
எமது கோப்பாய் பிரதேசத்திலேயே சமுர்த்தி பெறும் குடும்பங்கள் அதிகமாகவுள்ளன. சராசரியாக 23 ஆயிரம் குடும்பங்கள் இப்பிரதேசத்தில் வசிக்கின்றன. இக் குடும்பங்களில் 7239 குடும்பங்கள் ஏற்கனவே சமூர்த்தி பெறுகின்றன. இன்றைய தினம் மேலும் 1840 குடும்பங்கள் சமுர்த்திக்குத் தகுதி பெறுகின்றன. எனவே எமது பிரதேசத்தில் 9 ஆயிரத்து 36 பேர் சமூர்த்தி பெறுகின்றனர் என்றால் நாம் தான் யாழ் மாவட்டத்திலேயே அதிக வறுமை நிலைக்குள் வாழ்கின்றோம் என்பது புலனாகின்றது. இவ் வறுமைக்கு எமது மக்களுடைய முயற்சியற்ற போக்குகள் காரணமல்ல. எமது இனத்தின் மீது வலிந்து திணிக்கப்பட்ட அடக்கு முறைகளும் ஒடுக்குமுறைகளும் எம்மை நிர்க்கதியாக்கிய யுத்தமும் பிரதான காரணங்களாக அமைகின்றன.

போரின் பத்தாண்டுகளை நாம் கடந்து விட்டோம். எமக்கான அரசியல் தீர்வுகள,; நாட்டின் அரசியலில் ஸ்திரமற்ற தன்மைகளாலும் அரசியல் தீர்விற்கான அர்ப்பணிப்பற்ற போக்குகளாலும் இழுபறிக்குள்ளாகியுள்ளது. ஒரு இனத்தின் இருப்பு அரசியல் பொருளாதார சமூக கலாச்சார வரலாற்றுப் பேணிப்பாதுகாப்புடன் தொடர்புபட்டது. ஆகவே நாம் எமது பொருளாதாரம் பற்றி அதிக அக்கறை கொள்ள வேண்டும். அந்த வகையில் நாம் வறுமையில் இருந்து மீண்டெழுவதற்கு சமுர்த்தி போன்ற உத்திகளை சரியாகக் கையாளவேண்டும்.
தனியே நாம் நிவாரணம் பெறும் வக்கற்றவர்களாக வாழ முடியாது. கிடைக்கின்ற சமூர்த்தி போன்ற உதவிகளை சரியாகப் பயன்படுத்தி எதிர்காலத்தில் எமது பொருளாதாரத்திற்கும் தேசத்திற்கும் ஆக்கபூர்வமாகப் பங்களிப்போராக எம்மை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். நாம் எம்மைச் சூழவுள்ள வளங்களை இனங்கண்டு உற்பத்தி முறைமைகளுக்கு எம்மைத்தயார்ப்படுத்த வேண்டும். இப்போது உற்பத்தி முயற்சிகள் இன்றி தனியே நுகர்விற்கான பண்பினை நாம் ஏற்றுப் பயணிக்கும் துர்ப்பாக்கியம் உள்ளது. இது அபாயகரமான விடயமாகும். எனவே தயவு செய்து கிடைக்கின்ற உதவிகளை தொழிலுக்கான உத்தியாக வடிவமைத்து விரைவில் சமூர்த்தி பெறும் தகுதியில் இருந்து வெளியேறி சிறந்த பிரதேசம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு நாம் திடசங்கட்பம் பூணவேண்டும். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -