அட்டாளைச்சேனை 9 ஆம் பிரிவு புறத்தோட்ட ஊர்க்கரை வாய்க்கால் சில தனி நபர்களினால் சட்டவிரோதமான முறையில் மூடி வருகின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர், நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர், அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆகியோர் இது விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அரச அதிகாரிகள் இது விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கடந்த காலங்களைப் போன்று பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியை மக்கள் நாடவேண்டிவரும் என்றும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.