இதேவேளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சர் புத்திக பத்திரண கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் நீண்டகால இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனிய வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் திருமதி அனோமா கமகே பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி கனிய வள அபிவிருத்தி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் இன்றைய தினம் காலை ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.
நாட்டிலுள்ள ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து கடந்த வாரம் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.