கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எந்தத் தவறும் இழைக்காதவர் என்பதனால், அவரை அப்பதவியிலிருந்து நீக்குவது அவசியமற்றது எனவும், அவரை பதவி நீக்குவதற்கு தான் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மொரவெவ பிரதேச சபையின் தலைவர் பொல்ஹேன்கொட உபரதன தேரர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை ஜெகப் பார்க் ஹோட்டலில் இன்று (02) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட புனரமைப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த புனரமைப்பு நடவடிக்கைகள் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து அரசியல்வாதி என்ற வகையிலும், தேரர் என்ற வகையிலும் தேடிப் பார்த்தோம். இதன்போது, அவர் எந்தத் தவறுடனும் தொடர்பற்றவர் என்பது எமக்கு அறிய முடிந்தது எனவும் தேரர் கூறியுள்ளதாக இன்றைய தேசிய சகோதர ஊடகமொன்று அறிவித்துள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -