பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கலந்துரையாடல்களின் மூலம் பிரச்சினைக்கு தீர்வுக்காண முன்வர வேண்டும் என்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து நாட்டின் அரசியல் நிலவரங்களிலும் சிறு தடுமாற்றம் ஏற்பட்டிருந்தது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிரணியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றையும் கொண்டுவந்திருந்தனர்.
இதன் பின்னணியிலேயேஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்கள் தொடர்பிலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைசெய்ய பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன. ஆகவே தெரிவுக்குழுவின் விசாரணைகளின் இறுதி அறிக்கைக்கு அமைவாக ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -