முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை எங்களுடைய போராட்டம் தொடரும், இன்று அமைச்சுப் பதவிகளைத்துறந்திருக்கின்ற நாம் சமூக நலன்களை பாதுகாப்பதற்காக இதற்கு மேல் எதைச் செய்ய வேண்டுமோ அதனையும் செய்வதற்குநாங்கள் தயாராக இருக்கின்றோமென முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வியாழக்கிழமை(06-06-2019)பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அண்மையில் முஸ்லிம்களுக்குஎதிராக நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வன்முறை காரணமாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் சில முக்கியதீர்மானங்களை எடுக்க வேண்டி ஏற்பட்டது. நாட்டின் ஒற்றையாட்சிக்கும் பாதுகாப்பிற்கும் சமூகங்களின் ஒற்றுமைக்குமாகமுஸ்லிம் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்தார்கள். பதவியிலிருந்து விலகிய அவ் முஸ்லிம்அமைச்சர்கள் மீண்டும் தமது பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் தற்போது வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இராஜினாமா செய்தவன் என்ற வகையிலும் முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமாச் செய்வதற்கு முன்னோடியாக உழைத்தவன்என்ற ரீதியிலும் அவ்வேண்டுகோளை விடுத்த மகாநாயக்க தேரர்களுக்கு மிகுந்த கௌரவத்தை கொடுக்க விரும்புகின்றேன்.அவர்களின் அக்கருத்து எமக்கும் எம்சமூகத்திற்கும் மிகப் பெரிய ஆறுதலைத் தந்திருக்கின்றது. அத்தோடு முஸ்லிம் சமூகம் மீதுபெரும்பான்மை மக்களின் சந்தேகம் படிப்படியாக மறைவதற்கும் வழியமைத்துள்ளது.
ஆனால் அவர்களுடைய அக்கோரிக்கை சம்பந்தமாக எங்களால் உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாதுள்ளது. முன்னாள்அமைச்சர் றிசாத் பதியுதின், மேல் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர்கள் சஹ்ரானுடைய பயங்கரவாத குழுவுக்கு உதவிசெய்தார்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை இந்த நாட்டிலுள்ள பல அரசியல் முக்கியஸ்தகர்கள் கூறி வருகின்றனர்.இந்நிலமையில் மீண்டும் பதவிகளை எடுக்கின்றபோது குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு முஸ்லிம் அமைச்சர்கள்அளுத்தம் கொடுக்கின்றார்கள் என்று மீண்டும் வீண் புரளியை கிளப்புவார்கள். இதனால் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்சமூகம் திரும்பவும் பீதிக்குள்ளாக்கப்படும். எனவேதான் அமைச்சுப் பொறுப்பை எடுப்பதில் எந்தவித ஆர்வத்தையும் எங்களால்காட்ட முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
அது மாத்திரமன்றி இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும்கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் சகோதர சகோதரிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அனியாயமாக கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். சஹ்ரானுடைய குழுவினரை விடுதலை செய்யுமாறு நாம் கூறவில்லை.
முஸ்லிம்கள் தைரியமாக இருக்க வேண்டும், நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள். இந்த நாட்டை அல்லது ஒரு மாகாணத்தைபிரிக்க வேண்டும் என்றோ பொலிஸ் மற்றும் சமஸ்டி அதிகாரம் வேண்டும் என்றோ நாட்டின் பிரிவினைக்காக போராடுகின்ற ஒருசமூகம் அல்ல. மாறாக பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் சுதந்திரத்திற்காக அவர்களை எதிர்த்து முஸ்லிம்கள் போராடியவர்கள்.அன்று இருந்த மன்னர் ஒருவரை பாதுகாப்பதற்காக முஸ்லிம் பெண் மணி உயிர் இழந்திருக்கின்றார். அதேபோன்று கல்முனைசம்மாந்துறை பிரதேசத்திலிருந்து ஆங்கிலேயருக்கு எதிராக இந்த நாட்டின் சிங்கள தலைவர்களுடன் இணைந்து போராடிய ஏழுபேர் சிறைக்குச் சென்றார்கள். நாடு பூராகவும் இந்த நாட்டின் விடுதலைக்காக போராடிய முஸ்லிம் தலைவர்கள் இருந்துகொண்டிருக்கின்றார்கள்.
இன்று நாட்டின் பாதுகாப்பு நிலமை மிகக் கேவலமாக இருக்கின்றது. பாதுகாப்பு கட்டமைப்பில் புலனாய்வுப் பிரிவுகள் சஹ்ரான்சம்பந்தமாக பல தகவல்களை பரிமாறி இருக்கின்றது. இரண்டு வருடங்களாக அதில் உள்ள ஆபத்து சம்பந்தமாக நாட்டின்பாதுகாப்பு கவுன்சிலுக்கு கூறப்பட்டிருக்கின்றது, ஆனால் அந்த விடயம் பாரதுரமாக எடுக்கப்பட்டு சஹ்ரானையும் அவருடையகுழுவினரையும் கைது செய்யாமல் இருந்தது பாராதூரமான பிழையாகும். இதனை தெரிவுக் குழு முன்னிலையில் ஆஜரானகட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மிகத் தெளிவாக சொல்லி இருக்கின்றார்.
அப்பிழையினை பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்பு முக்கியஸ்தர்களும் செய்துவிட்டு, இன்று முஸ்லிம் சமூகத்தை பகடைக்காயாக்கி அவர்களை பலி கொள்வதற்கு இடம் கொடுக்க முடியாது. மிகப் பெரிய அமைப்பான எல்.ரி.ரி.ஈ அமைப்பினை துவம்சம்செய்தவர்கள் எமது நாட்டின் பாதுகாப்பு தரப்பினர். இந்நிலையில் சஹ்ரான் ஒரு பயங்கரவாதி அவர் இந்த நாட்டில் பயங்கரதாக்குதலை மேற்கொள்ள இருக்கின்றார் என்று பாதுகாப்பு உயர் பீடத்தில் உள்ளவர்கள் தெரிந்துகொண்டும் ஏன்? அவருக்குஎதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு நடந்த பின்பு இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களை பலி கொள்ளலாம், கைது செய்யலாம், அவர்களது பொருளாராத்தைஅழிக்கலாம் என்று அவர்கள் விரும்பினார்களா?. இதுதான் குறுநாகலில் நடந்தது, கடைகள் அழிக்கப்பட்டன, பள்ளிவாயல்கள்எரிக்கப்பட்டன. எந்த பாதுகாப்பு தரப்பினாலும் அங்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அனியாயமாக உயிர் ஒன்றும்கொல்லப்பட்டது. இவ்வாறு எல்லா விடயங்களிலும் தவறை விட்டு விட்டு வெந்த புண்ணில் ஈட்டி எறிவது போன்று பலபராளுமன்ற உறுப்பினர்களும் இனவாத செயற்பாட்டாளர்களும் இனவாதத்தை கக்குகின்றார்கள்.
கல்முனை சாய்ந்தமருதில் சதோச வாகனத்தில் சஹ்ரானுடைய குழு வந்து சென்றது என்று விமல் வீரவன்ச வேண்டுமென்றுநாட்டு மக்கள் மத்தியில் மீண்டும் பீதியை கிளப்புகிறார். அங்குள்ள பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் அது தொடர்பில் விசாரித்தபோது அவ்வாறு சதோச வாகனம் பாவிக்கப்படவில்லை