அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நானும் அமைச்சர் ரிசாத்தும் வேறுபட்ட அரசியல் கொள்கை கொண்டவர்கள் அரசியல் ரீதியாக எமக்குள் பல கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. கடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களில் என்னையையும் எனது கட்சியையும் தோற்கடிக்கவே தனது திருகோணமலையில் அவர் பணியாற்றினார்.அவர் ஆளும்கட்சி அமைச்சராக இருந்து இதுவரை அவரின் அமைச்சு மூலம் எனக்கு ஒரு ரூபா கூட அபிவிருத்திக்கு ஒதுக்கவில்லை. ஒரு வேலைவாய்ப்பு கூட எனது ஆதரவாளர்களுக்கு தரவில்லை.
ஆனால் இது அனைத்தும் எமக்குள் காணப்படும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளும் போட்டிகளுமே. இந்த கருத்து வேறுபாடுகளை நான் அரசியல்ரீதியாகவே எதிர்கொள்வேன்.
இப்போது எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை நான் அரசியலையும் தாண்டி எமது சமூக ரீதியான பிரச்சினையாகவே பார்க்கிறேன். மற்றும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னால் பின்கதவால் பிரதமர் பதவியை கைப்பற்றி மூக்குடைந்த எதிர்கட்சியினரின் பாரிய இனவாத நிகழச்சி நிரலொன்று உள்ளது.
இந்த நிகழச்சி நிரலின்படியே இன்று பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் அமைச்சர் ரிசாத் ஆளுனர்களான ஹிஸ்புல்லாஹ் ,அசாத் சாலிக்கெதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். பாராளுமன்ற உறுப்பினர் வியாலேந்திரன் போன்றோர் அவர்களின் நிகழ்ச்சி நிரலையே நிறைவேற்றுகின்றனர்.
அமைச்சர் ரிசாட் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வெளிவந்த பின் பல எமது கட்சி ரீதியாக ஒரு முடிவொன்றை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்கள். கடந்த நாள் அரசியல் குழப்பத்தின் போது ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க அமைச்சர் ரிசாத் செய்த பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது.
எனவே நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்துக்கு வாக்கடுப்புக்கு வரும்போது அரசியல் கருத்துவேறுபாடுகளை தாண்டி எமது சமூகத்தின் பால் நின்றே எனது வாக்கை பயன்படுத்த எண்ணியுள்ளேன். பாராளுமன்றத்தில் விவாதத்தின் போது எனது நிலைப்பாடு தொடர்பாக விரிவாக உரையாற்றிய பிறகு எனது வாக்கை பயன்படுத்துவேன்.
ஊடகப்பிரிவு.