அமைச்சர் மனோ நாளை கன்னியா, நீராவியடி ஆலய விவகாரங்கள் தொடர்பில் திருகோணமலை, முல்லைத்தீவு விஜயம்


ர்ச்சைக்குரிய திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரம், முல்லைத்தீவு நீராவியடி விநாயகர் ஆலய விவகாரம் தொடர்புகளில் நாளை திங்கட்கிழமை திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேரடி விஜயம் செய்ய உள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ. ஏ. புஷ்பகுமாரவுக்கும், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனுக்கும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும்,தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் விடுத்துள்ள பணிப்புரைகளின்படி இரண்டு மாவட்ட செயலகங்களிலும் அனைத்து தரப்புகளையும் அழைத்து இரண்டு கூட்டங்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் காலை 8.30 மணிக்கு திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரம் தொடர்பிலும், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு முல்லைத்தீவு நீராவியடி விநாயகர் ஆலய விவகாரம் தொடர்பில் இக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -