மோடியின் விமானம் பறக்க பாக்கிஸ்தானிடம் அனுமதி கேட்கும் இந்தியா..

பாகிஸ்தான் வான்வழியாக பிரதமர் மோடியின் விமானம் செல்வதற்கு அனுமதி அளிக்குமாறு இந்திய அரசு, அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த சம்பவத்துக்குப்பின் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி தடை விதித்தது. பாகிஸ்தான் வான்வெளியில் மொத்தமுள்ள 11 வழித்தடங்களில் 2 வழித்தடத்தில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 வழித்தடங்களில் தற்போது வரை தடை நீடித்து வருகிறது.

இந்நிலையில் கிர்கிஸ்தானில் வருகிற 13 மற்றும் 14-ந் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு (SCO) நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அப்போது பாகிஸ்தான் வான்வழியாக பிரதமர் மோடியின் விமானம் செல்வதற்கு அனுமதி அளிக்குமாறு இந்திய அரசு, பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



ஆனால் கடந்த மே மாதம் 22, 23-ம் தேதிகளில் இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிஷ்செக் நகருக்கு செல்லும்போது, பாகிஸ்தான் வான்வெளியியில் பறக்க இந்திய அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டது, அதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -