கிண்ணியாவில் இன்று (14) தமிழ் பேசும் ஒருவருக்கு தண்டப்பண சிட்டை சிங்கள மொழியினால் போக்குவரத்து பொலிஸார் வழங்கியுள்ளார் இது தொடர்பில் தனது மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக சிங்கள மொழியை வாசித்து புரிந்து கொள்ளாத நபர் ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் உள்ள High way போக்குவரத்து பொலிஸார் மாவட்டம் பூராகவும் தங்களது பணிகளை முன்னெடுக்கின்ற போதும் மொழி விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது
நாட்டின் தேசிய மொழி சிங்களம் தமிழ் என கூறப்பட்டாலும் விரும்பிய மொழியை பேசுவதும் புரிவதும் ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ள மொழி உரிமையாகும்
இவ்வாறான மொழி உரிமைகளை பாதுகாக்கவே நாட்டில் தேசிய மொழி நல்லிணக்க அமைச்சு போன்றன உருவாக்கப்பட்டுள்ளது
தமிழ் மொழியையும் ஒரு மொழியாகவும் தனிமனித உரிமைகள் விடயத்திலும் உரிய அமைச்சின் அமைச்சர், பொறுப்பான உயரதிகாரிகள் செயற்பட வேண்டுமென பாதுகாக்கப்பட்ட நபர் இது விடயமாக உரியவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறார்.