கல்முனை பிராந்திய சிரேஷ்ட வைத்திய அதிகாரியும்,கல்முனை பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த டொக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் சனிக்கிழமை(18-05-2019)தாய்லாந்து பயணமாகின்றார்.
தாய்லாந்தின் தலைநகர் பேங்கோக்கில் நடைபெறவுள்ள“தொற்றா நோய்த்தடுப்பின் புதிய வழிமுறைகள்”;என்ற தலைப்பில் ஓரு வார காலம் நடைபெறவுள்ளது.இந்தச் செயலமர்வில் கலந்து கொள்ளவே இவர் தாய்லாந்து பயணமாகின்றார்.
இவர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி,மருதமுனை அல்மனார் மத்திய கல்லுரி,கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரும்,பேராதனைப் பல்கலைக் கழகத்தின் மருத்துவத்துறை பட்டதாரியுமாவார்.
மருதமுனையைச் சேர்ந்த மர்ஹ_ம்களான அப்துல் றசீது மரைக்கார்,ஆசியா உம்மா தம்பதியின் ஆறாவது புதல்வருமாவார்.