வடக்கு ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் -
IMS சர்வதேச ஊடக அமைப்பும் யாழ்.ஊடக அமையமும் இணைந்து நடாத்திய தகவலறியும் உருமைச் சட்டம் தொடர்பான போட்டியில் வெற்றியீட்டிய ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(5) யாழ்.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது.

மாலை 4 மணிக்கு ஆரம்பமான இந்த விருது வழங்கும் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.IMS சர்வதேச ஊடக அமைப்பும் யாழ்.ஊடக அமையமும் இணைந்து தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் வடமாகாணத்தில் 5 மாவட்டங்களையும் சேர்ந்த 30 ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியை நடாத்தியது.
இந்த பயிற்சியின் அடுத்த கட்டமாகா பயிற்சியில் கலந்து கொண்ட 30 ஊடகவியலாளர்களுக்கிடையில் தகவலறியும் உரிமைச் சட்டத்தை பிரயோகித்து செய்திகள், ஆக்கங்களை எழுதும் போட்டி ஒன்றிணையும் நடாத்தியிருந்தது.இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற ஊடகவியலாளர்களுக்கே விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. கு.செல்வகுமார், அ.யசீகரன், எஸ்.குமணன் ஆகிய 3 ஊடகவியலாளர்கள் விருதுகளை பெற்றனர்.இந்நிகழ்வில் வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கலந்து கொண்டிருந்தார்.














எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -