எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மின்சாரத்தை தடையின்றி வழங்குவதற்கான பொறுப்பை தாங்கள் அனைவரும் ஏற்றுள்ளக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மே மாதம் பருவப்பெயர்ச்சி காலநிலை வலுப்பெறும் என காலநிலை அவதான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அத்துல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும், 20 ஆம் திகதியின் பின்னர் இந்த மாற்றம் ஏற்படும். இதுதவிர, வங்காள விரிகுடாவை அண்மித்துள்ள பகுதிகளில் ஏற்படும் குழப்பநிலை காரணமாக மாலை வேளையில் ஏற்படும் மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கக்கூடும்.
எனினும், தமது கண்காணிப்பு அமைய, அதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை. நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 9 மாகாணங்களில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 775 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிக எண்ணிக்கையிலானோர் வட மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, 10 ஆயிரத்து 110 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 593 பாதிக்கப்பட்டுள்ளனர்.