எச்.எம்.எம்.பர்ஸான்-
இம்முறை வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றின் படி வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் சாதனையினை நிலைநாட்டியுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் தெரிவித்தார்.
இன்று (5) ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு விஜயமளித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.பொ.த சாதாரண தர மாணவிகளுக்கு கற்பித்த ஆசிரியர்களை சந்தித்துப் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
இம்முறை வெளியான க.பொ.த சாதாரண தர பேறுபேற்றில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது எனவே அதற்காக எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்தோடு குறித்த மாணவிகளுக்கு தியாகா சிந்தனையோடு கற்பித்த ஆசிரியர்களுக்கும், இரவுநேர கற்றல் செயற்பாடுகளை ஏற்படுத்திக் கொடுத்த பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர்களுக்கும், ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியதிபர் எம்.யூ.எம்.முகைதீன், ஆசிரிய ஆலோசகர் சல்மான் வஹாப் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.