பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 10 பேர் சகல பாடங்களிலும் அதி திறமைச் சித்தி


எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சை முடிவுகளின் படி மட் பட் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி மாணவர்கள் 10 பேர் சகல பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளனர்.

கோகிலன் சஞ்ஜித் , நிமலநாதன் பபிலோசன் , மேகநாதன் கஜவதனன் , தவேந்திரன் மிதுரங்கள் , வரதராஜன் சித்தாசன் , சத்தியமோகன் துசாரகேஸ் , நடேசன் கிருத்திகரன் , குணவர்த்தன அபிலாசனன் , யோகேஸ்வரன் சஜீவன் , அருள்ராஜ் சுஜிந்த ஆகிய 10 மாணவர்கள் 9 பாடங்களிலும் ” ஏ ” சித்தியினையும் 4 மாணவர்கள் 8 பாடங்களில் ” ஏ ” சித்தியினையும் 4 மாணவர்கள் 7 பாடங்களில் ” ஏ ” சித்தியினையும் பெற்றுள்ளதுடன் பரீட்சைக்கு தோற்றிய 185 மாணவர்களுள் 155 மாணவர்கள் க.பொ.த.உயர்தரத்தில் கல்வி பயில்வதற்கு தகுதியும் பெற்றுள்ளனர்.

சித்தியடைந்து பாடசாலைக்கும் , பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும் , கற்பித்த ஆசிரியர்களுக்கும் , பெற்றோருக்கும் பெருமை சேர்த்த மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று ( 4 ) பாடசாலை திறந்தவெளியரங்கில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் , மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் கே.யோகநாதன் , பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் ஐங்கரன் தவலிங்கம் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சையில் சித்தியடைய தவறிய மாணவர்கள் கல்லூரியில் நடத்தப்படும் 13 வருட உத்தரவாத கல்வித்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பாடசாலை அதிபர் கே. தம்பிராஜா தெரிவித்தார்.




















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -