கிண்ணியாவில் அண்மைக் காலமாக இரவு நேரங்களில் இடம் பெற்று வரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில காலகே அவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.
கிண்ணியா அலுவலகத்துக்கு நேற்று இரவு (17) பொலிஸ் பொறுப்பதிகாரியை அழைத்து இடம் பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்த பிரதியமைச்சர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்
பொலிஸ் பாதுகாப்பு சேவையை நடமாடும் நிலையில் அதிகரிக்குமாறும் கடந்த ஐந்து நாட்களாக குறித்த கொள்ளைச் சம்பவம் இடம் பெற்று வருகிறது மூன்று வருடங்களுக்கு முன்னரும் மர்ம மனிதர் கிறீஸ்மேன் பிரச்சினைகளும் இவ்வாறே உருவெடுத்தது புனித நோன்பு காலத்தில் மக்கள் பீதியுடனும் அச்ச சூழ் நிலையில் சிறு பிள்ளைகளும் உளரீதியான பாதிப்புக்களுடனும் பல்வேறு சம்டவங்கள் இடம் பெற்றதை அறிவோம்.
கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை நிலவி வருகிறது மேலும் 30 பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இது விடயமாக பொலிஸ் மா அதிபரை இன்றைய தினம் (18) சந்தித்து பேச்சு வார்த்தை இடம் பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.