மாகாண சபை ஆட்சி முறையை நீக்கிவிட்டே ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும்-அஸ்கிரிய பீடம்

மாகாண சபையைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு மட்டுமே முடியும் என அஸ்கிரிய பீட பிரதம செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.

மாகாண சபை இன்றி இந்த நாட்டை நிருவகிக்க முடியும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். கடந்த பல மாதங்களாக மாகாண சபைகள் செயற்படுவதில்லை. இருந்தாலும், நாட்டின் சகல நடவடிக்கைகளும் எதுவித தடையுமின்றி முன்னெடுக்கப்படுகின்றன.

இதனால், மாகாண சபையை நீக்கி விட்டே ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

ஜனாதிபதி முறைமை மட்டும் நீக்கப்படுமானால், அது மதத்துக்கும் நாட்டுக்கும் ஆபத்தானது எனவும் தேரர் மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -