ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் விசேட ஒதுக்கீட்டின் கீழ் மொரவெவ பிரதேச சபை சிரேஷ்ட உறுப்பினர்
ஏ. எஸ். எம்.பைசர் அவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட மையவாடி வீதி திறப்பு விழா இன்று (08) இடம்பெற்றது.
மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமியினால் இவ்வீதி உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
மொரவெவ பிரதேச சபையின் வழிகாட்டலுடன் 1350,000/=ரூபாய் செலவில் இவ்வீதி நிர்மாணிக்கப்பட்டதுடன், ரொட்டவெவ அஸ்மி பாலர் பாடசாலையின் மீள் நிர்மான வேலைகளும் புதிதாக சீரமைக்கப்பட்டு இன்றைய தினம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டது.
ரொட்டவெவ மையவாடி மிகவும் காடாக காட்சியளித்த நிலையில் ரொட்டவெவ பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ. எஸ். எம். பைசர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமி தெரிவித்தார்.
இதேவேளை மொரவெவ பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டத்தின் போது இன மத வேறுபாடு இன்றி சமமான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பள்ளி வாசல் தலைவர் ஏ. எம். அமான், ரொட்டவெவ ஹிப்ல் மத்ரஸாவின் மௌலவி மார்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



