பாராளுமன்ற மின் தூக்கி ( Power lift) யில் மாட்டிக் கொண்ட எம் பி க்கள் 15 நிமிடத்தின் பின்னர் வெளியேறினர்

பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 12 பேர் பாராளுமன்ற மின் தூக்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 15 நிமிடங்கள் வெளிவர முடியாமல் சிக்கித் தவித்துள்ள சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற செயற்குழுவுக்கு விடுக்கப்பட்ட அவசர அழைப்பையடுத்து அவர்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளனர்.

சபை அமர்வின் போது விமல் வீரவன்ச எம்.பி. இது தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

“நாம் பாராளுமன்ற மின் தூக்கியில் சிக்குண்டு இருந்தோம், அவசர அழைப்புக்கு தொடர்பு கொண்டபோதும் 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது ” என அவர் சபாநாயகரிடம் கூறியுள்ளார்.

அதற்கு சபாநாயகர், “சம்பவம் தொடர்பில் நான் கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்ன நடந்தது என்பதை தேடிப் பார்க்கின்றேன்” எனப் பதிலளித்துள்ளார்.

அதற்கு விமல் வீரவங்ச,“ கவலைப்படுவதாக கூறிப் பயனில்லை. இன்னும் சில நிமிடங்கள் நாம் அங்கிருந்தால், மூச்சுத் திணறி இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி, பந்துல குணவர்தன, சீ.பி. ரத்னாயக்க உள்ளிட்டவர்களும் மின் தூக்கியில் சிக்கியிருந்ததாக கூறப்படுகின்றது.டெ/சி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -