இலஞ்சம்பெற்ற குற்றச்சாட்டுக்காக களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லக்ஷ்மன் விதானபத்திரனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, அதனை ஐந்து ஆண்டுகளில் அனுபிக்க உத்தரவிட்டார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு களுத்துறை பகுதியிலுள்ள காணியொன்றின் நுழைவு பகுதியில் உள்ள வயல் நிலம் ஒன்றூடாக வீதியொன்றை அமைப்பதற்காக ஒருவரிடம் 30 இலட்சம் ரூபா பெற்றதாக களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லக்ஷ்மன் விதானபத்திரனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத்தாக்கல் செய்திருந்தது.
ஏற்கனவே அது தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர் பிணையில் இருந்து வந்த நிலையில், அவ் வழக்கு தொடர்பில் நீண்ட விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இந் நிலையிலேயே வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -