மட்டக்களப்பு மாவட்டத்தில் அறநெறிப்பாடசாலைக்கல்வியை மேம்படுத்த இந்து குருமார் ஒன்றியம் நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது.
இதனடிப்படையில் ஆயித்தியமலை அறநெறிப்பாடசாலையின் நூறு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சத்யோயாத சிவாச்சாரியார் அ.கு. இலிகிதராஜா குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து குருமார் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்தங்கிய ஆயித்திய மலை பிரதேசத்தில் அறநெறிக்கல்வியை ஊக்கப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது உணரப்படுவதாக இந்து குருமார்கள் இங்கு வலியுறுத்தினர்.