ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சிக்கிளைகள் புனரமைக்கும் செயற்திட்டம்

ஆதிப் அஹமட்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரையின் பேரில் பல்வேறு பிரதேசங்களிலும் வட்டாரக்கிளைகளை புனரமைக்கும் செயற்பாடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும்,தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் மண்முனைப்பற்று பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட பாலமுனை,காங்கேயனோடை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குற்பட்ட பூநொச்சிமுனை ஆகிய பிரதேசங்களில் ஏற்கனவே இயங்கி வந்த வட்டாரக்கிளைகளினுடைய அங்கத்தவர்களை சந்தித்து கலந்துரையாடி குறித்த வட்டாரக்கிளைகளை கட்சியின் தலைமையகமான தாறுஸ்ஸலாமில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்வதற்கான விண்ணப்பபடிவங்களும் கையளிக்கப்பட்டன.மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குற்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் புதிய வட்டாரக்கிளையானது ஸ்தாபிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்வுகளின் போது வட்டாரக்கிளைகள் ஊடாக குறித்த பிரதேசங்களில் ஆற்றக்கூடிய சேவைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் யு.எல்.எம்.என்.முபீன் விரிவாக விளக்கமளித்ததோடு குறித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மண்முனைப்பற்று பிரதேச சபைக்குற்பட்ட வட்டாரக்கிளைகள் புனரமைப்பு முடிவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் காத்தான்குடி நகர சபைக்குற்பட்ட வட்டாரக்கிளைகள் புனரமைக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன.
கடந்த வாரம் கட்சியின் தேசியத்தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் ஆகியோரை சந்தித்த யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் இந்த வட்டாரக்கிளைகள் புனரமைப்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதோடு பல்வேறு ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -