மேலும் அவரது ஊடக அறிக்கையில் "நைற்றா"நிறுவனம் இலங்கையில் உள்ள மிக முக்கியமான நிறுவனமாகும்.
நைற்றா - (தேசிய கைத்தொழில், தொழிற்பயிற்சி அதிகார சபை)யானது இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குதல்,அவர்களுக்கான வழிகாட்டல் வழங்குதல், பல்வேறுபட்ட நவீன தொழிற்பயிற்சிகள் வழங்கல் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை உள்ளடக்கிய ஒரு முக்கியமான நிறுவனம்.
இந் நிறுவனமானது வரவு செலவுத்திட்டத்திலே அதிகமான நிதியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதும்,
இளைஞர்களுக்கு புதிய புதிய தொழிற் பயிற்சிகளை வழங்க கூடிய நிறுவனமாகும்.
அவ்வாறான ஒரு நிறுவனத்திற்கு தவிசாளராக நசீர் ஹாபிஸ் அவர்கள் நியமிக்கப்பட்டமைக்கு தான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
புதிய பயிற்சி நெறிகளை இருக்கின்ற தொழில் பயிற்சி நிலையங்களில் ஆரம்பித்தல், புதிய நிலையங்களை கிழக்கு மாகாணம் மட்டுமல்லாமல் ஏனைய மாகாணங்களிலும் ஆரம்பித்தல் போன்ற வேலைகளை புதிய தலைவர் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் மேலும்
பல புதிய பயிற்சி நிலையங்களை நிறுவ கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் முழு ஒத்துழைப்பையும் தான் வழங்குவதோடு புதிய தலைவர் தனது பணியை மிக சிறப்பாக செய்ய எல்லாம் வல்ல இறைவன் உதவி செய்ய வேண்டும் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டபட்டுள்ளது.