ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று (23) சனிக் கிழமை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் அவர்கள் வரவேற்றார்.
நிலாவெளி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தில் விமானம் மூலமாக திருகோணமலையை வந்தடைந்த பிரதமரை பிரதியமைச்சர் உற்சாக வரவேற்பளித்தார்.
திருகோணமலை லஷ்மி நாராயண கோயிலில் வசேட பூஜை வழிபாட்டில் பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளதுடன் இன்னும் பல பௌத்த விகாரைகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் வழிபாட்டிலும் ஈடுபடவுள்ளார்.
குறித்த வரவேற்பு நிகழ்வில் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டாக்டர் அருண சிறிசேன அவர்களும் உடனிருந்தார்.