இன்று (23) ஓட்டமாவடியில் பகிரங்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்.

ட்டமாவடி அல் கிம்மா தனியார் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வளாகத்தில் இன்று 23 ம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரைக்கும் பகிரங்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் போதைவஸ்துப் பாவனையும் சமூகத் தீமைகளும், நாங்கள் சொல்வதென்ன, முன்னோர்களின் ஈமானியப் பலமும் நமது ஈமானிய பலவீனமும், சுவனம் ஹராமாக்கப்பட்டோர். போன்ற தலைப்புக்களில் உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ் பிரதம ஆசிரியர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி), கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, கந்தளாய் இப்னு தைமியா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் பீ.பீ.ஜாபிர் (ஷரபி), நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் வீ.ரீ.எம்.முஸ்தபா (தப்லீகி) ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -