இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸடீன் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவச் சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கொலை வழக்கு தொடர்பாகக் குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பது தொடர்பான கட்டளை வாக்குமூல விசாரணை கடந்த 09.01.2019ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று குற்ற வாக்குமூலம் சுயமாக வழங்கப்பட்டதாக தீர்மானிக்கப்பட்ட நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
