இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் - இ - முகமது என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட உலக நாடுகள் மேற்காண் தாக்குதலை மிக கடுமையாக கண்டித்துள்ளதுடன், தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் நிற்போமென அறிவித்துள்ளன.
அதே சமயம், தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்கிற பாகிஸ்தான் தான் புல்வாமா தாக்குதலுக்கு காரணமெனவும், இப்போதும்கூட ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு பாதுகாப்பு அளித்துக்கொண்டிருப்பது பாகிஸ்தான் தான் எனவும், உலக அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வோமென அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் உதவித்தொகையை நிறுத்தியுள்ளதாகவும், பாகிஸ்தான் - இந்தியாவிற்கிடையே ஆபத்தான சூழல் நிலவுவதாகவும், அது தொடர்பான ஆலோசனை கூட்டங்களை தாங்கள் ஒருங்கிணைக்க கூடுமெனவும் அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
முன்னதாக, தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.