பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை


எம். வாமதேவன்
ஆலோசகர்
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அமைச்சு

அறிமுகம்
பெப்ரவரி 7ந் திகதியான இன்று அங்குரார்ப்பபணம் செய்யப்படவிருக்கும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை மலையக மக்களின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். பொருளாதார ரீதியாகவும் இ சமூக ரீதியாகவும் தனிமைப்பட்டிருந்த இந்த சமூகம் இ தேசிய நீரோடையில் ஒன்று கலக்காதிருந்தமை பெருங்குறையாக காணப்பட்டது. அரச நிர்வாக இயந்திரத்தில் இச்சமூதாயத்திற்கான அடையாளம்இ அமைச்சு என்ற மட்டத்திலிருந்துஇ அதிகாரசபை என்ற நிலைக்கு உயர்ந்து ஒரு புதிய அர்த்தத்தை தந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் பெருந்தேட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் தேவைக்கான பகைப்புலம், இவ்வுருவாக்கலின் செயன்முறை, எதிர்நோக்கிய சிரமங்கள், இவ்வதிகாரசபையின் நோக்கங்கள் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால சவால்கள் என்பவை பற்றி குறித்து ஆய்வது பொருத்தமான ஒன்றாகும்.

தேவை குறித்த பகைப்புலம்
1997ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் பெருந்தோட்ட மக்களுடைய பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு ஒரு குழுவினை அமைத்தார். இந்த குழுவின் சிபாரிசுக்கு அமையவே இந்த மக்களின் அபிவிருத்தி அம்சங்களை முன்னெடுப்பதற்காக ஒரு தனியான அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டது. இதனுடைய பெயர் 2010ம் ஆண்டு வரை பலமுறை மாற்றப்பட்டு வந்தாலும் வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி போன்ற விடயங்கள் இவ்வமைச்சில் உள்வாங்கப்பட்டது. இந்த பதின்மூன்றாண்டு காலகட்டத்திலே இந்த மக்களை நோக்கிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக இந்த சமுதாயம் தேசிய நீரோட்டத்தில் ஒன்று சேரும்; முறையானது துரிதப்படுத்தப்பட்டது. 2006ம் ஆண்டு இந்த அமைச்சு தேச நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு என பெயர் மாற்றம் பெற்றது. துரதிஸ்டவசமாக 2010ம் ஆண்டு இந்த அமைச்சு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என பெயர் மாற்றம் பெற்று தோட்ட சமுதாய அபிவிருத்திக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இல்லாதொழிக்கப்பட்டது. இதன்பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரே இந்த அமைச்சு மீண்டும் புதிதாக 2015ம் ஆண்டு ஜனவரியில்; தோட்ட உட்கட்டமைப்பு என புதிய அமைச்சு உருவாக்கப்பட்டது. 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த அமைச்சானது மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி என பெயர்மாற்றம் பெற்றது. புதிய அமைச்சாக இருந்த காரணத்தினால் இதற்கான பௌதீக வளங்களும் மற்றும் மனித வளங்களும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருந்;தது. இதனை பூரணப்படுத்தி இந்த அமைச்சினூடாக வேலைத்திட்டங்களை முன்னேடுப்பதே இந்த அமைச்சுக்கு உள்ள பிரதான சவாலாக அமைந்தது.
இந்த அமைச்சு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க (2015-2025) பத்தாண்டுகளை உள்ளடக்கிய சமூக அபிவிருத்தி நடவடிக்கை திட்டம் ஓன்றை தயாரித்தது. இது அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டபோது ஜனாதிபதியின் பணிப்புக்கேற்ப அதனுடைய காலம் 2015 முதல் 2020 வரை உள்ளடக்கி ஜந்தாண்டாக குறைக்கப்பட்டது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு முழுமையான நிர்வாக பொறிமுறை அமைச்சிடம் இருக்கவில்லை. இந்த காரணத்திற்காகவே ஒரு அதிகார சபையின் தேவை உணரப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் இன்னுமொரு முக்கிய விடயத்தை குறிப்பிடுவது பொருத்தமானதாகும். 2004ம் ஆண்டு இந்த அமைச்சினால் மூன்றாண்டு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 2005ம் ஆண்டு வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனையில் பெருந்தோட்ட பகுதிகளுக்காக உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்திக்காக ஒரு உயர் சக்திமிக்க அதிகார சபை ஒன்று நிறுவப்படும் என கூறப்பட்டது. ஆனால் அரசாங்கம் 2005ம் ஆண்டு நிறுவப்பட்ட பின்னால் இந்த அதிகார சபையை உருவாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

செயல்முறை
இந்த அணுகுமுறையிலேயே ஜந்தாண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரசபை தேவை என அமைச்சரவை அங்கீகாரத்திற்கு பத்திரம் ஒன்று சமர்பிக்கப்பட்டது. இந்த மசோதாவிற்கான ஆரம்ப வரைபு அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் நிறுவப்பட்ட பணிக்குழுவினால் (வுயளமகழசஉந) மேற்கொள்ளப்பட்டது. இக்குழுவின் தலைவராக, தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் செயற்பட்டார். இப்பணிக்குழுவில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில், காணி வீடமைப்பு, பொதுமுயற்சிகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் கப்பற்போக்குவரத்து சட்டத்துறை திணைக்களம், பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆகியவறற்றின் பிரதிநிதிகளும் இடம் பெற்றனர். இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக அமைச்சின் ஆலோசகர் செயற்பட்டார். இந்த குழுவின் ஆரம்ப வரைபு 2016ம் ஆண்டு ஜுலையில் அமைச்சரவையில் அங்கிகரீக்கப்பட்டது, இதை தொடர்ந்தே, இதற்கான மசோதா சட்ட வரைஞர் திணைக்களத்தில் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபரின் கருத்துகள் பெறப்பட்டு அமைச்சரவைக்கு மீண்டும் சமரப்;பிக்கப்பட்டது. இது குறித்து, நிதியமைச்சு பெருந்தோட்டமைச்சு, காணியமைச்சு ஆகியவை தங்களுடைய அவதானங்களை சமர்பித்தனர். இந்த அவதானங்களை உள்வாங்கி மசோதாவானது மீண்டும் சட்டவரைஞர் திணைக்களத்தினால் மீள்உருவாக்கப்பட்டு சட்டமா அதிபரின் அங்கீகாரத்துடன 2018 ம் ஆண்டு ஜீன் மாதம் 25ம் திகதி மசோதாவானது வர்தமான அறிவித்தலில் வெளியிடப்பட்டது. இது ஒக்டோபர் மாதத்தில் பாராளுமன்றத்தி;ல் விவாதத்திற்கு எடுக்கப்பட்டபோது இதில் பங்கேற்ற அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 35 பாராளுமன்ற பிரதிநிதிகளும் இதனை ஆதரித்து பேசினர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

எதிர்நோக்கிய சிரமங்கள்
இம்மசோதாவின் ஆரம்ப சட்டவரைவு, அமைச்சரவையினால் நிறைவேற்றப்பட்டு, வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்படுவதற்கு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகியது. நிதிஅமைச்சு தனது அவதானத்தில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் (Pடயவெயவழைn ர்ரஅயn னுநஎநடழிஅநவெ வுசரளவ) இவ்வமைச்சின் கீழ் செயற்படும் போது இன்னுமொரு அதிகாரசபை தேவையா? இதன் செயற்பாடுகளோடு முரண்படுமா என்ற வகையில் கேள்விகள் எழும்பியிருந்தது, எனவே இதுகுறித்து பணிக்குழு மீளாய்வு செய்து பின்வரும் அம்சங்களை அறிக்கையிட்டது.
1. நிதியத்தின் பணிகள் வரையறுக்கபட்ட ஒன்று. பெருந்தோட்ட மக்களிள் நலன்புரி விடயங்கள் சம்பந்தமாகவே இது கவனம் செலுத்துகின்றது,
2. இதனுடைய வருமான உருவாக்க முயற்சிகளும் வரையறுக்கப்பட்டதாகும்.
3. அமைச்சினால் வழங்கப்பட்ட நிதியின் மூலமாகவே, வீடமைப்பு வேலைகளை இது செய்து வருகின்றது, அமைச்சிற்கு அப்பால் இது வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்வதில்லை.
4. ஆரம்ப சிறுவர் பராமரிப்பு குறித்த வி;டயங்களில் கல்வி உட்பட இது கவனம் செலுத்துகின்றது. இது நலன்புரி விடயங்களில் கவனம் செலுத்துகின்றதே ஒழிய அபிவிருத்தி குறித்த விடயங்களில் அல்ல.


பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, நிலங்களை சுவீகரிக்கும் போது, இந்த அமைச்சின் சம்மதம் பெறவேண்டும் எனவும் காணி அமைச்சு, இதே விடயம் குறித்து விசேட ஏற்பாடுகள் தேவை இல்லை, நடைமுறையிலுள்ள பொதுவான ஏற்பாடுகளே மேற்கொள்ளப்படவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தன. இவைகள் கவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரைபு திருத்தப்பட்டு சட்டவரைஞரால் மீள்திருத்தம் செய்யப்பட்டு, சட்டமா அதிபரின் அங்கிகாரம் பெறுவதிலே கால தாமதத்திற்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட அது காரணமாயிற்று. 

நோக்கங்களும் செயற்பாடுகளும்
இந்த அதிகார சபைக்கு இரண்டு முக்கிய குறிகோள்கள் உள்ளன. ஒன்று இச்சமுதாயத்தினரை சமூக பொருளாதார கலாச்சார உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலம் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதினை உறுதிப்படுத்தலாகும். இரண்டாவது சமுதாயத்தினரை தேசிய அபிவிருத்தி செயன்முறைக்கு பங்களிப்பதற்காக சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வலுப்படுத்தலாகும். இந்த நோக்கங்களை அடைவதற்காக இந்த அதிகாரசபையினுடைய பணிகள் இம்மசோதாவிலே எடுத்துக்கூறப்பட்டுள்ளன. முதலாவது மலைநாட்டின் புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் நிகழ்ச்சி திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குதலாகும். இநத அமைச்சு வீடுகளை அமைப்பதை பிரதான பணியாக மேற்கொண்டு வருகிறது. இந்த வீடுகளை மையமாகக் கொண்டு அவற்றை புதிய கிராமங்களாக மாற்றியமைக்கக்கூடிய பொறுப்பு இந்த அதிகாரசபையை சார்ந்த ஒன்றாக இருக்கும்.
இதற்காக இந்த அதிகாரசபை தேசிய மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களிலுள்ள நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து செயற்படும். அத்தோடு சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் இது பங்குபற்றுதலையும் உறுதிப்படுத்தும். இன்று அரசாங்கத்தின் கொள்கையாக இருப்பது இந்த மக்களுக்கான வீட்டுரிமையை வழங்குதலாகும். இந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்காக தோட்டங்களில் வாழும் சட்டரீதியான குடியிருப்பாளர்களுக்கு தெளிவான காணி உறுதிகளை வழங்கலை இந்த அதிகாரசபை வசதிப்படுத்தும் அத்தோடு தோட்டத்துறையினுடைய இளைஞர்களுக்கு கல்வி முன்னேற்றத்துக்காக மூன்றாம்நிலை உயர்கல்வி நிறுவனங்களுக்கான அனுமதியை அதிகரிப்பதற்கு உதவிகளை வழங்கும். தோட்ட சமுதாயத்தினருக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் இந்த அதிகாரசபை கவனம் செலுத்தும் அத்தோடு பலவீனக்குழுக்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்கள் முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளை வலுப்படுத்தி அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டரீதியாக தோட்டங்களில் வாழுகின்ற குடியிருப்பாளர்களுக்கு எல்லா வசதிகளையும் உறுதிப்படுத்தும். இந்த பிராந்தியங்களில் சூழலை பாதுகாப்பதற்கு எல்லா நடவடிக்கைகளையும் இது மேற்கொள்ளும். இடர் பாதுகாப்பு தோட்டப்பகுதிகளில் ஏற்படும் மண்சரிவு போன்ற அபாயங்களை அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு மாற்று நோக்கங்களுக்காக அவற்றை பயன்படுத்துவதற்கு முயற்சிகள் செய்யும்.

எதிர்கால சவால்கள்

இச்சவால்களை நிறுவன ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் நோக்கலாம். எந்த ஒரூ புதிய நிறுவனம் உருவாக்கப்படும் போது, ஏற்கனவே செயற்படும் நிறுவனங்களோடு நெருங்கிய ஒருங்கிணைப்பு தேவைப்படும் (ஊழழசனiயெவழைn) தவிர்க்க முடியாதவகையிலும் செயற்பாடுகள், ஒரே வகையாக அமையும்போது, இரண்டையும் பிரித்து பார்ப்பதில் நடைமுறை சிக்கல்கள் தோன்ற கூடும். எந்த ஒரு நிறுவனமும் தான் செயற்படுகின்ற செயற்பாட்டினை விட்டுக்கொடுக்காது, ஏனெனில்; தங்களது இருப்பும் (ளரசஎiஎயட) தோற்றமும் (ஐஅயபந) பெருமை என்பவை அவற்றின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது, 'தோட்டப்புற சமூக அபிவிருத்தி' எனும் போது 1992ம் ஆண்டிலே தோட்ட கம்பனிகள் உருவாக்கப்பட்டதிலிருந்து ' டிரஸ்ட்' என்ற நிறுவனமே பொறுப்பாக இருந்து வந்தது. முதல் பத்தாண்டு காலப்பகுதியில் (1992-2002) இந்த நிறுவனம் வெளிநாட்டு உதவியுடன் பெருந்தோட்டகைத்தொழில் அமைச்சின் கீழே செயற்பட்டு வந்தது. அத்தோடு இது தோட்ட கம்பனிகளின் சார்பாகவே செயற்பட்டு வந்தது. எனவே கொள்கை ரீதியான முடிவுகள் அமைச்சின் மட்டத்திலேயே மேற்கொள்ளப்படுவதால் இந்த அதிகார சபையோடு இணைந்து டிரஸ்ட நிறுவத்தை முரண்பாடற்ற வகையில் செயற்படுத்தவேண்டிய பொறுப்பு அமைச்சை சார்ந்ததாக அமையும்.
செயற்பாட்டு ரீதியாக நோக்குகையி;ல் அமைச்சின் கீழ் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை புதிய கிராமங்களாக மாற்றவேண்டிய தேவை இந்த அதிகார சபைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மனித, நிதி மற்றும் பௌதீக வளங்கள் ஒன்று திரட்டப்பட்டு ஏனைய நிறுவனங்களோடு நெருங்கிய தொடர்புகொண்டு செயற்பட வேண்டிய தேவை இவ்வதிகார சபைக்கு உண்டு. ஏனைய நிறுவனங்களின் உதவி ஒத்தாசைகள் இலகுவாக கிடைக்கக்கூடிய ஒன்றல்ல என்பது கடந்தகாலங்கள் சுட்டிக்காட்டுகின்ற அநுபவமாகும் ஆகவே சகல நிறுவனங்களின் ஒத்துழைப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இவ்வதிகாரசபைக்கு உரிய ஒன்றாகும்.
தோட்டத்துறையில் தற்போது தோட்;ட தொழிலாளர்கள் மட்டுமன்றி புதிய சமூக அடுக்குகள் உருவாகியுள்ளன. தோட்ட சனத்தொகையில் 30-40 சதவீதமானோர் தோட்ட தொழிலில் ஈடுபடாது தங்களின் வாழ்வாதாரத்தை பிற முயற்சிகளில் பெற்று தோட்டங்களில் சட்டரீதியாக வாழ்கி;னறனர். ஆசிரியர்கள் இ முச்சக்கரசாரதிகள் இ கட்டுமான தொழிலாளர்கள் இ கடைச்சிப்பந்திகள் ஆடைத்தொழிலாளர்கள் இ ஆகியோர் தோட்டத்தொழிலாளர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் உள் ஈர்க்க வேண்டிய கடப்பாடு இவ்வதிகாரசபைக்கு உண்டு.
இந்த அதிகார சபையின் செயற்பாடுகளின் மூலமாக, இச்சமுதாயம் ஏனைய சமுதாயங்களோடு ஒப்பிடுகையில், எல்லா அபிவிருத்தி அம்சங்களிலும் சமமான நிலையை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக, இம்மக்களின் பிரதான பிரச்சினையாக காணப்படும் வறுமை, போசாக்கின்மை படித்தவர்களிடையே காணப்படு;ம் வேலையின்மை போன்றவை நீக்கப்பட்டு, நாட்டினது மொத்த அபிவிருத்திக்கும், வறுமை ஒழிப்பிற்கும் பங்களிப்பதாக அமையும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -