புதையல் தோண்டிக்கொண்டிருந்த பெண்ணொருவர் உட்பட ஏழு பேர்-மட்டக்களப்பில் சம்பவம்


ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
ட்டக்களப்பு-கரடியனாறு - காரக்காடு பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த பெண்ணொருவர் உட்பட ஏழு பேர் 17.02.2019 காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

(பெக்கோ லோடர்) குழிதோண்டும் கனரக வாகனம் மற்றும் புதையல் தோண்டுவதற்குப்பயன்படுத்தபட்ட சவள், அலவாங்கு உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள் குருநாகல்- இப்பாகமுவையைச்சேர்ந்த ஒருவரும் பொலன்னவை- சுங்காவில்லைச் சேர்ந்த நான்கு பேரும் ஏறாவூரைச் சேர்ந்த ஒருவரும் மற்றும் காரக்காடு பகுதியைச்சேர்ந்த பெண்ணொருவரும் அடங்குகின்றனர்.

கரடியானாறு பொலிஸார் இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்குக்கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து பொலிஸ் புலனாய்வுப்பிரிவு உத்தியோகத்தர்களது ஒத்துழைப்புடன் இக்கைது இடம்பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -