கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தினால் மாவட்டம்தோறும் முன்பள்ளிஆசிரியர்களுக்கான மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் அமைக்கும்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
அம்பாறை மாவட்டங்களில் முன்பள்ளி ஆசிரியர்கள் 500 பேர் கலந்து மாவட்டமுன்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகத்தினை நேற்று (16) அம்பாரை நகரமண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சிறியானிவிஜயவிக்கிரமசிங்க, கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின்தவிசாளரும்,முன்னாள் அமைச்சருமான எம். எஸ். உதுமாலெப்பை, அம்பாறைமாவட்ட பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் செயலாற்று பணிப்பாளர்எஸ்.புஞ்சி பண்டார உட்பட பலர் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.