சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ('கபே') அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எம்.அஹமட் மனாஸ் தெரிவிப்பு
எஸ்.எல்.அப்துல் அஸீஸ்-மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கான திட்டம்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டாம் என சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ( 'கபே' ) அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாகாண சபை தேர்தலை தொடர்ச்சியாக பிற்போடுவது தொடர்பாக தொடர்ச்சியாக பலரும் பேசி வருவதானது, மிகவும் கவலைக்குரிய விடயமாக காணப்படுகின்றது. ஆகையால் மாகாண சபை தேர்தல் நடாத்துவது தொடர்பான தீர்மானம்களை பின் கதவின்னுடாக தள்ளி விடாமல், உடனடியாக அந்த தேர்தலை நடாத்துவதற்குரிய ஆயத்தங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற் கொள்ள வேண்டும் என வேண்டிக்கொள்வதாக சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ('கபே') அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எம்..அஹமட் மனாஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய அரசியலில் காணப்படுகின்ற பின்னடைவுகள், சிக்கல்கள் காரணமாக மாகாண சபை தேர்தலை பிற்போடுவதானது ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகவே காணப்படுகின்றது. தற்போது சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இந்த மாகாண சபை தேர்தல் தொடர்பாக வித்தியாசமான கருத்துக்களை முன்னெடுத்து வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக இந்த மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கான உபாயங்களை மேட்கொள்வதனை காணக்கூடியதாகவுள்ளது.
ஒரே கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அதே போன்று அமைச்சர்கள் வித்தியாசமான பல கோணங்களில் பேசிவருவதனை இந்த காலம்களில் ஊடகம்கள் வாயிலாக காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக மாகாண சபை தேர்தலை நடாத்தாமல் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு போகவேண்டும் என்ற நோக்கத்தில் செயல் படுவதனையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதி தேர்தலினையும், தேசிய அரசியலில் காணப்படுகின்ற முரண்பாட்டினையும் வைத்துகொண்டு மாகாண சபை தேர்தலை பிற்போடுவதனால் குறிப்பிட்ட ஆறு மாகாணங்களுக்கும் தொடர்ச்சியாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையினை காணக்கூடியதாகவுள்ளது.
தற்போது, இலங்கையில் உள்ள ஒன்பது மகாணம்களில் ஆறு மகாணம்களின் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், குறிப்பாக இந்த ஆறு மகாணம்களிலும் கடந்த காலம்களில் 262மக்கள் பிரதிநிதிகள் காணப்பட்டார்கள். ஆனாலும் தற்போது 262மக்கள் பிரதிநிதிகளும் இல்லாத நிலையில் ஆறு ஆளுனர்கள் மாத்திரமே உள்ளனர்.
குறிப்பாக வட மாகாணத்தில் 38உறுப்பினர்களும், கிழக்கு மாகாணத்தில் 37உறுப்பினர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 44உறுப்பினர்களும், வட மத்திய மாகாணத்தில் 33உறுப்பினர்களும், வட மேல் மாகாணத்தில் 52உறுப்பினர்களும், மத்திய மாகாணத்தில் 58உறுப்பினர்களும் கடந்த மாகாண சபையின் போது அங்கத்தவர்களாக காணப்பட்டனர். ஆயினும் இந்த 262பேர்களுக்காக ஆறு ஆளுனர்களே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு நிர்வாகத்தில் ஈடுபடுகின்ற நிலைமையினை காணக்கூடியதாக உள்ளது.
ஆகையால் தொடர்ந்தும் இந்த தேர்தலை பிற்போடுவது தொடர்பாக கலந்தாலோசிக்கது உடனடியாக மாகாண சபை தேர்தலை நடாத்த சம்மந்தப்பட் ட தரப்பினர் முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்