மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை விளங்கி செயற்படுவோம். முல்லைத்தீவில் கெளரவ காதர் மஸ்தான்

மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பட்ட திறமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் சமூகக் கூறாகும் ,அவர்களது திறமைகளையும் இயலுமைகளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் உலகமுழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது.
அவர்கள் திறமைகள் குறித்து மக்களை விழிப்புணர்வு ஊட்டுவதுடன் அவர்களை சமூகம் மறந்து விடக்கூடாது என்பதுதான் அதற்கான காரணமாகும்.
இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னால் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் தெரிவித்தார்.
இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் தாமரை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் எழுபத்தைந்து உறுப்பினர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான உலருணவு பொருட்களை வழங்கி வைத்து உரையாற்றிய பொழுதே இக் கருத்துக்களை தெரிவித்தார்.

இன்று வள்ளிபுனம் பொது நோக்கு மண்டபத்தில் தாமரை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் திரு. எஸ்.சிவகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது.,

இந்த மாற்றுத்திறனாளிகளை நாம் மறந்து விடவில்லை அவர்களுக்காக எமது கதவுகள் திறந்தே இருக்கின்றன முதல் கட்டமாக இருபது மாற்றுத் திறனாளிகளுக்கு 150000 ரூபா பெறுமதி யான வாழ்வாதார பொருட்களுக்கான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதுடன் அவைகள் விரைவில் அம்மக்களுக்கு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் புதுக் குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் திரு.சத்தியசுதர்சன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -