சாய்ந்தமருது சுயேட்சை குழு , கொழும்பு போரம் உறுப்பினர்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் சந்திப்பு


அஷ்ரப் ஏ சமத்-
ல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சை குழு உறுப்பினர்கள் மற்றும் கொழும்பு போரம் (Colombo Forum) என்றழைக்கப்படும் சாய்ந்தமருதூரைச் சேர்ந்த கொழும்பு வாழ் பிரமுகர்களும் கடந்த 27ம் திகதி மாலை,உள்ளக,உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தனவை, அவரது இல்லத்தில் சந்தித்தித்தனர்.

இச்சந்திப்பில் சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபையை உருவாக்குவது சம்பந்தமாக 26ம் திகதி அமைச்சர் வஜிர அபேவர்தனவின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுவின் பேச்சு வார்த்தையில் அல்லது சாய்ந்தமருது நகரசபை விடயத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவில், சாய்ந்தமருதில் இருந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மூலம் மக்களின் ஆணையைப் பெற்று சாய்ந்தமருதில் இருக்கும் ஒரேயொரு அரசியல் அதிகாரம் பெற்ற ஒன்பது மாநகர சபை உறுப்பினர்களின் சார்பாக யாரும் அழைக்கப்படவோ அல்லது சேர்த்துக் கொள்ளப்படவோ இல்லை என்பதை மிகவும் அளுத்தமாக இச்சந்திப்பில் சுட்டிக்காட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் வஜிர அபேவர்தன , சாய்ந்தமருது மக்கள் சார்பாக, அக்குழுவிற்கு பிரதிநிதி ஒருவரை உடனடியாக தெரிவுசெய்து தருமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உறுப்பினர்கான நாங்கள் ஏகமனதான தீர்மானத்துடன் ஒருவரின் பெயரை அமைச்சருக்கு வழங்கினோம்.
அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் , சாய்ந்தமருது நகரசபை விடயத்தை துரிதமாக முடித்துத் தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.
இதற்காக அமைச்சர் அவர்களுக்கு சாய்ந்தமருத மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் கலந்து கொண்ட உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -