'தங்கவேல்புரம்' , ' பழனிவேல்புரம்' ஆகிய இரண்டு புதிய கிராமங்கள்

லைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஹட்டன் டிக்கோயா தோட்டத்தில் 20 வீடுகளைக் கொண்ட 'தங்கவேல்புரம்' , அப்போட்ஸ்லி , ஆனைத்தோட்டத்தில் 10 வீடுகளைக் கொண்ட ' பழனிவேல்புரம்' ஆகிய இரண்டு புதிய கிராமங்கள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ. ஶ்ரீ தரன், ஆர். ராஜாராம், எம்.ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் அம்பகமுவ அமைப்பாளர் தெய்வேந்திரன், மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அமரர்களான பழனிவேல், தங்கவேல் ஆகியோர் பிரதேசத்தில் பிரபலமான தொழிற்சங்கவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் நினைவாகவே கிராமங்கள் பெயரிடப்பட்டுள்ளன.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -