மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மாளிகைக்காடு நூர் பள்ளிவாசல் சுற்றுப்புறத்தை ஒளியூட்டுவதற்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நவீன எல்.ஈ.டி மின்விளக்குகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா குறித்த நவீன மின்விளக்குத் தொகுதியினை மாளிகைக்காடு நூர் பள்ளிவாசல் நிர்வாக சபையிடம் கையளித்தார்.
இதன்போது காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாளிகைக்காடு கிழக்கு வட்டார அமைப்பாளர் எம்.நாசர் உள்ளிட்ட மாளிகைக்காடு நூர் பள்ளிவாசல் நிர்hவக சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பிரசன்னமாகியிருந்தனர்.
இரவு நேரங்களில் குறித்த பள்ளிவாசலின் சுற்றுப்புறம் இருள் சூழ்ந்து காணப்படுவதனால் நிலவும் சிரமங்கள் தொடர்பில் மாளிகைக்காடு நூர் பள்ளிவாசல் நிர்hவக சபையினர் இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் கவனத்திற்கு கொண்டுவந்ததனைத் தொடர்ந்து குறித்த நவீன எல்.ஈ.டி மின்விளக்குகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.