இயலாமை என்பது திறமைகளை புரிந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமே தவிர அது சமுகத்திலுள்ள குறைபாடு அல்ல

-அப்துல் அஸீஸ், பிராந்திய இணைப்பாளர், மனித உரிமைகள் ஆணைக்குழு-
யலாமையுடைய பெண்கள் சமூகத்திற்கு பாரமாய் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் வேலைக்கு உதவாத அல்லது பெறுமதி மற்றும் திறமை இல்லாதவர்கள் என்றும் சமுகத்தில் ஓரங்காட்டி அல்லது விலக்கி வைக்கப்படுவதால் சமுகத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அல்லது கல்விபெறும் வாய்ப்புக்கள் தூரப்படு;த்தப்படுகின்றது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 18.02.2019 அன்று ஆணைக்குழு காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட மட்டத்திலான வட்ட மேசைக் கலந்துரையாடலுக்கு தலைமை வகித்த அஸீஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,

இன்று எமது சமுகத்தில் இயலாமையுடைய பெண்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றனர். அவர்களின் உடல் உழைப்புக்களினால் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கிறது. அவர்கள் இயலாமையை காரணம் காட்டி கையேந்தவில்லை என்பது பாராட்டப்படக்கூடியது. உடல் ரீதியாக மற்றும் மன ரீதியான வித்தியாசங்கள் குறைகள் அல்ல. அது சமுகத்திற்கு புதிதாய் யோசி;ப்பதற்கும் மற்றும் ஒவ்வொருவரின் உண்மையான திறமைகளை புரிந்து கொள்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாகும். இயலாமையுடைய பெண்களுக்கு மட்டுமன்றி அனைவர்களுக்கும் ஏதாவதொரு குறையோ அல்லது திறமையோ இருக்கின்றது. சமுகம் தன் எண்ணங்களை மாற்றி வாழ்கையைக் கொண்டு செல்வதற்கான குடும்பத்திற்கு அல்லது சமுகத்திற்கு உறுதுணையாக இயலாமையுடையவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்தல் அனைவருக்கும் அதன் பலன் கிடைக்;;க்கூடும்.
'கௌரவமான வாழ்க்கைக்கு இயலாமையுடைய பெண்களை முன்னிலைப்படுத்தல்' என்ற தொனிப் பொருளில் 2019 ஆண்டின் சர்வதேச மகளிர் தின நிகழ்வை நடாத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. பிரதேசத்தில் இயலாமையுடைய பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு;, பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளி;ப்படு;த்துவதற்கு பிராந்திய செயலணி ஒன்றும் இக்கலந்துரையாடலின் போது தாபிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது அரச, அரசசார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்களி;ன் பிரதிநிதகளும் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -