7.5 ரிச்டர் அளவில் தென் அமெரிக்காவில் இன்று ஏற்பட்ட நில நடுக்கம்..

தென் அமெரிக்காவின் பெரு - ஈக்வேடர் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலநடுக்கம் 7.5 ரிச்டர் அளவில பதிவாகியுள்ளதாகவும் சுமார் 30 விநாடிகள் உணரப்பட்டதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் தெரவித்துள்ளனர்.

குறித்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். எனினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. தென் அமெரிக்க நாடான பெருவில் வருடத்துக்கு சுமார் 200 நிலநடுக்கங்கள் வரை ஏற்படுகின்றன.

அவற்றில் பெரும்பாலானவை மக்களால் உணரப்பட முடியாதவை. இதற்கு முன்பு பெருவில் 2007 ஆம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -