கல்லொழுவை அல் அமானில் 693 புள்ளிகளுடன் ஸ்தான்புல் இல்லம் முதலிடம்

ஐ. ஏ. காதிர் கான்-
மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், அதிபர் எம். ரீ. எம். ஆஸிம் தலைமையில், கல்லொழுவை அழுத்மாவத்தை வீதி முனாஸ் ஹாஜியார் விளையாட்டு மைதானத்தில், (06) புதன்கிழமை நடைபெற்றன.
இந்நிகழ்வுகளில், மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
ஸ்தான்புல் (பச்சை) இல்லம் 693 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்திற்குத் தெரிவாகி சாம்பியன் கேடயத்தைச் சுவீகரித்துக் கொண்டது. குருதுபா (நீலம்) இல்லம் 537 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், பக்தாத் (சிவப்பு) இல்லம் 530 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. விநோத உடைப்போட்டியில், முதலாவது இடத்தை ஸ்தான்புல் இல்லம் - ரொபோ கார், இரண்டாம் இடத்தை பக்தாத் இல்லம் - நீரிழிவு நோயாளி, மூன்றாம் இடத்தை குர்துபா இல்லம் - சமூக வலைத்தளங்களும் அதன் பாதிப்புக்களும் ஆகியவற்றுக்காகப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -