இலங்கையில் காணப்படும் துறை முகங்கள் தொடர்ச்சியான அபிவிருத்திக்கு இட்டுச் செல்லப்படும் துறை முகங்களில் காணப்படும் ஊழியர்களின் பிரச்சினைகள் உட்பட பல குறைகள் தீர்க்கப்படும் என துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.
துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சராக தனது கடமைகளை இன்று திங்கட் கிழமை கொழும்பில் உள்ள பிரதியமைச்சர் அலுவலகத்தில் பொறுப்பேற்றதன் பின் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்
ஹம்பாந் தோட்டை,கொழும்பு,காலி,திருகோணமலை போன்ற மாவட்டங்களில் துறை முகங்கங்கள் காணப்படுகிறது இவ்வாறான துறை முகங்கள் அபிவிருத்தி செய்யப்படும் நாட்டின் தேசிய வருமானத்திற்கும் பாரிய பங்களிப்புக்கள் துறை முகம் ஊடாக காணப்படும்.
புதிதாக பிரதியமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் துறை முகங்கள் என்பது மிக முக்கியமான ஒரு அமைச்சாக காணப்படுகிறது. தொடர்ச்சியான அபிவிருத்திகள் தொடரும் தொடர வேண்டும் என்பதே எமது இலக்குமாகும் என்றார்.
இவ் நிகழ்வில் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் சாகலரத்நாயக்க, வர்த்தக வாணிப கைத்தொழில் மற்றும் நீண்டகாலம் இடம் பெயர்ந்தோரை மீளக் குடியேற்றுதல் கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான வீ.சி இஸ்மாயில், ஏ.எச்.எம்.பௌசி உட்பட பிரதியமைச்சரின் குடும்பஸ்தர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்று பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.