யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

பாறுக் ஷிஹான்-
யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் நீண்டகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு சங்க அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அணுசரனையில் நேற்று(2) சிறப்பாக நடைபெற்றன.
புதிய ஆண்டில் யாழ் மாவட்டத்தில் உள்ள தமிழ் முஸ்லீம் பாடசாலைகளான நாவாந்துறை ரோமன் கத்தோலிக்க பாடசாலை, ஒஸ்மானியா கல்லூரி ,கொட்டடி நமசிவாய பாடசாலை , வைத்தீஸ்வரா பாடசாலை ,வண்ணை நாவலர் மகா வித்தியாலயம், கதீஜா பெண்கள் கல்லூரி ,ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வு யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாமின் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம விருந்தினராக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார்.

இங்கு உரையாற்றிய பிரதம விருந்தினர் றிப்கான் பதியுதீன் கல்வி கற்கும் மாணவர்களாகிய நீங்கள் மாணவர்கள் எனும் அந்தஸ்தினை இழப்பதற்கு முன்பு ஒழுக்கம் பெரியோரை மதிக்கும் பண்பு ஒற்றுமை என்பவற்றோடு எமது எதிர்கால வாழ்வினை எமக்கும் மற்றவர்களுக்கும் பயனடையும் வகையில் கற்று சிறந்த முறையில் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
குறித்த கற்றல் உபகரணங்கள் யாவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களிள் இருந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஒரு உதவித்திட்டமாகவே வழங்கி வைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் யாழ் மாநகர சபை பிரதி மேயர் ஈசன் OHRD செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் முஜாஹித் நிஸார் சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -