இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அதியுன்னத சேவைநலன் விருது வழங்குதல் - 2018 மற்றும் ஓய்வுபெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு – 2017, 2018 என்பன பல்கலைக்கழக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் 2019.01.01இல் நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக தாபனங்கள் பிரிவின் ஏற்பாட்டில் ஆண்டின் முதல் வேலைநாளில் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் இந்நிகழ்வு இம்முறையும் மிக விமர்சையாக நடைபெற்றது.
பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி. V. விவேகானந்தராஜா விஷேட அதிதியாக கலந்துகொண்ட இவ்விழாவில் துணைவேந்தர் பேராசிரியர். T. ஜெயசிங்கம் சிறப்பு விருந்தினராகவும் அத்துடன் பிரதி துணைவேந்தர் வைத்திய கலாநிதி.K.E. கருணாகரன், திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியர் . V.கணகசிங்கம், பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் கலாநிதி. S. மௌனகுரு, உட்பட பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள் மற்றும் நிருவாக, கல்விசார், கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
35 வருடங்கள் அதியுன்னத சேவையாற்றிய 09 ஊழியர்களுக்கு தங்க விருதும், 30 வருடங்கள் அதியுன்னத சேவையாற்றிய 03 ஊழியர்களுக்கு வெள்ளி விருதும், 25 வருடங்கள் அதியுன்னத சேவையாற்றிய 11 ஊழியர்களுக்கு வெண்கல விருதுகள் வழங்கப்பட்டதுடன் 2017 மற்றும் 2018ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஓய்வுபெற்ற நூலகர் உட்பட 09 கல்விசாரா ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது மேற்படி ஊழியர்களுக்கு சான்றிதழ்கள், வெகுமதிகள், நினைவுச் சின்னங்கள் மற்றும் பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
பல்கலைக்கழக பதில் பதிவாளர். A. பகிரதன் அவர்கள் இந்நிகழ்வின் வரவேற்புரை நிகழ்த்தியதுடன் பல்கலைக்கழக தாபனங்கள் பிரிவின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் V. நவிரதன் அவர்களின் நெறிப்படுத்தலில் மேற்படி அதியுன்னத சேவைநலன் விருது வழங்குதல் மற்றும் ஓய்வுபெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.