கிழக்கில் 'முதல்நாள் முதல்பாடம் ' திட்டம் வெற்றி! மாகாணக்கல்விப் பணிப்பாளர் மன்சூர் புல்மோட்டைக்கு திடீர்விஜயம்.



காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஏற்பாடுசெய்த 'முதல்நாள் முதல்பாடம் ' திட்டம் வெற்றியடைந்துள்ளது என்று கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் நேற்று(2) புதன்கிழமை புல்மோட்டையிலிருந்து தெரிவித்தார்.
நேற்று(02) புதன்கிழமை பாடசாலைகள் புதியஆண்டின் புதிய முதல்தவணைக்காக முதல்நாள் திறக்கப்பட்டபோது முதலாவது பாடம் நடைபெறவேண்டும் என்பது திணைக்களத்தின் திட்டமாகவிருந்தது.

அதன்படி நேற்று மாகாணக்கல்வித்திணைக்களமும் வலயக்கல்வித்திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை அமுல்படுத்தியிருந்தன.
அதனை நேரடியாகக்கண்டுகொள்ளும் பொருட்டு நேற்று(02) புதன்கிழமை காலையில் 7மணிக்கு கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் திருமலை மாவட்டத்திலுள்ள புல்மோட்டைப்பிரதேசத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார். திரியாய பிரதேசத்திற்கும் திடீரென விஜயம்செய்தார்.
புல்மோட்டையிலுள்ள பாடசாலைகள் பணிப்பாளரின் திடீர் விஜயத்தை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. எனினும் முதல்நாளில் முதல்பாடம் பரவலாக சீராக இடம்பெற்றது. முதல்நாள் நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெற்றன. கடந்தகாலங்களில் புல்மோட்டைப்பிரதேசத்தில் முதல்நாள் பாடசாலை செயற்பாடுகள் சீராகஇருப்பதில்லையென்ற குற்றச்சாட்டு நிலவிவந்தமை தெரிந்ததே.
ஆனாலும் வழமைக்குமாறாக நேற்று அத்தனை பாடசாலைகளிலும் முதல்பாடம் வெற்றிகரமாக நடைபெற்றதை நேரடியாகவே அவதானித்தார். மகிழ்ச்சியடைந்தார்.
இத்திட்டத்தை கிழக்கிலுள்ள 17கல்வி வலயங்களிலும் அமுல்படுத்தப்படவேண்டுமென கடந்தவாரம் இடம்பெற்ற வலயக்கல்விப்பணிப்பாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய நேற்று(2) முதல்நாள் முதல் பாடம் வெற்றிகரமாக இடம்பெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது என்றார்.

முன்பெல்லாம் முதல்வாரம் பாடசாலை தயார்படுத்தலில் கழிந்துவிடுவதுண்டு. அதனால் மாணவரின் முதல்வாரம் வீணாகக்கழியும். ஆனால் தற்போது புதிய மாகாணக்கல்விப்பணிப்பாளர் மன்சூரின் வருகையின் பின்னர் முதல்நாளில் அதுவும் முதல்பாடமே சீராக இடம்பெறுவதென்பது உண்மையில் சந்தோசமாகவுள்ளது. கிழக்கில் கல்வி மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான அறிகுறி தென்படுவதாக கல்விச்சமுகம் தெரிவிக்கிறது.
இதேவேளை திருமலையிலுள்ள மாகாணக்கல்வித்திணைக்களத்தில் தொடர்ச்சியாக 4தினங்களாக நடைபெற்றுவந்த மேன்முறையீட்டு ஆசிரியர் இடமாற்றசபை நேற்று நிறைவுற்றுள்ளது. நாம் இந்தவாரமுடிவிற்குள் முடிவை அறிவிப்போம். என்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -